Pages

Search This Blog

Sunday, August 28, 2022

வைகுண்டத்தில் ஒரு நாள்.

 By

Rajeswari Neelakantan.

Illustrations by

Abirami (my 5 years old granddaughter) 

இடம் பாற்கடல்..

பாத்திரங்கள்:
வைகுண்ட வாசனான ரங்கநாதன்,
மகாலட்சுமி,ஆதிசேஷன் மற்றும் பலர் .

காலையில் நித்தியம் போல் கோ பூஜை கஜ பூஜை  அத்துடன் மங்கள வாத்தியம் முழங்க யோக நித்திரையில் இருந்து எழுந்தார் எம்பெருமான்.
 
சமையலறையில் மகாலட்சுமியின் கைவண்ணத்தில் பால் பாயசம் கொதிக்கும் வாசமும் சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் இரண்டும் பொங்கும் நறுமணமும் கூடவே  அற்புதமாக காற்றிலே மிதந்து வரும் புளியோதரையின் சுகந்தமும் கலந்து கட்டித்தான் யுகம் யுகமாக அவரை இந்த மாயா உலகத்திற்கு அழைத்து வரும்.  அதுபோக இனிய குரலில் மகாலட்சுமி  மெல்லியதாக பாடும் இசையும் காதுக்கு இனிமை அளிக்கும்

ஆனால் இன்று அந்த மாதிரி  எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது வைகுண்டத்தின் சமையலறை.

ஆதிசேஷனே! இன்றைக்கென்ன நம் சமையலறை சமையலுக்கான எந்த  முகாந்திரமும் இல்லாமல் இருக்கிறது? மகாலட்சுமி எங்கே போனார்?

கோவிந்தனே..எனக்கு எதுவும் தெரியாது என் கடன் பணி செய்து கிடப்பதே. பணி என்றால் பாம்பு என்றும் ஒரு அர்த்தம் உண்டு அல்லவா ஹிஹி...

இப்பொழுது சிலேடை  ரொம்ப முக்கியம் மகாலட்சுமி எங்கே என்று கேட்டால் நேரடியாக பதில் சொல்லு.

அச்சுதா.. தாயார் இன்று.....அதாவது...  இன்று உங்களுக்கு பட்டினிதான் என்று நினைக்கிறேன்

ஏன்.?என்ன ஆச்சு? இன்றைக்கு ஏகாதசியா?

அதெல்லாம் இல்லை .

பின்னே வேறு என்ன?

நான் ..... எனக்கு தெரியாது. நீங்கள் நேற்று தாயாரிடம் என்ன பேசினீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

நான் என்னடா பேசினேன் எப்போதும் போல கண்ணே மணியே என்று கொஞ்சிதானே பேசினேன்

இல்லை அது அது வந்து .. மாதவனே எனக்கு காது கிடையாது கண் தான் உண்டு .கட்செவி அதனால் எனக்கு எதுவும் கேட்கவில்லை.

சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டுபோயேன். இப்பொழுது நான் பேசுவது மட்டும் உனக்கு கேட்கிறதோ?

நாராயண நாராயண..

ஐயனே அதோ நாரதர் வருகிறார். தாயாருடன் தாங்கள்  பேசும்போது அவரும் கூட இருந்தார்.

  நாரதரே நீ நேற்று இங்கு வந்த போது தாயாருடன் நான் என்ன பேசினேன் உனக்கு ஞாபகம்  இருக்கிறதோ ?

ஓகோ ஸ்ரீதேவி தாயாரும்   பூமாதேவியும் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டு பூமிக்கு போனதை  நான் பார்த்துக்கொண்டு தான் வந்தேன். இங்க ஏதோ சண்டையா ? ஆஹா நான் பார்க்கலையே.

சண்டைக்கு அலைவதே உன் வேலையா போச்சு...
சரி அதற்கு என்ன. நீங்கள் இருவரும் சொல்லப்போவது இல்லை. அதனால் நான் பட்டினியாக இருந்து விடுவேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்  இதோ அரை நொடியில் நான் சமையலை முடித்து காட்டி உங்களுக்கும் விருந்து கொடுக்கவில்லை என்றால் நான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் ரங்கநாதன் இல்லை.

ஆஹா! நான் நாலு இடத்திற்கு போகிறவன் . நீங்கள் சமையலை முடிக்கும் வரை  இங்கே இருக்க முடியாது நான் வருகிறேன். நாராயண நாராயண

சரி சரி எனக்கு அதை பத்தி கவலை இல்லை ஆதிசேஷனே.. நம்ம கருடாழ்வாரை கூப்பிடு அவரிடம் இதோ இந்த லிஸ்ட்ல இருக்கும் எல்லாத்தையும் வாங்கி வரச்சொல்லணும்.

மதுசூதனா.... தாயாரும் பூமாதேவியும் கருடாழ்வார் மேலே அமர்ந்து தான் வெளியே சென்று இருக்கிறார்கள்

ஏதோ சதி திட்டம் போலத்தான் இருக்கிறது. பரவாயில்லை சமயலறையில் என்ன இருக்கிறதோ அதை வைத்து நான் சமைத்து முடிக்கிறேன்.
அடடா அடடா எத்தனை விதமான  காய்கறிகள் எத்தனை விதமான தானியங்கள் தாயார் கஷ்டப்படக்கூடாது என்று நான் வாங்கி போட்ட கருவிகள் எத்தனை !இதை...  இதை வைத்து ஜமாய்த்து விட மாட்டேனா.

இன்று ஸ்பெஷல் சமையல். பாற்கடலில் இருக்கும் பாலை சுண்டவைத்து பால்பாயசம் ,  வெள்ளரிபச்சடி கோசமரி நம் ஸ்ரீரங்கம் தோட்டத்தில் விளையும் புடலங்காய் கூட்டு திருவனந்தபுரம் பூசணிக்காய் சாம்பார்  காஞ்சிபுரம் அவரக்காய் கறி அற்புதமான குடகு நாடு மிளகு ரசம் திருநீர்மலை மிளகு வடை கோவிலடி புளியோதரை அதைத் தவிர ஹரித்வாரின் புதிதாக உரைஊற்றிய தயிர் . தாத்தாச்சாரியார் மாந்தோப்பு மாங்காய் ஊறுகாய் வேறு என்ன போடலாம் ஆதிசேஷனே உனக்கு ஏதாவது ஐடியா இருக்கின்றதா?

  நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் போதே என் ஆயிரம் நாக்கிலிருந்தும் ஜலம் கொட்டுகிறது நீங்கள் என்ன செய்தாலும் சரி, சாப்பிட நான் தயார். நீங்கள் சொன்ன  வண்ணம் செய்த பெருமாளாக  இந்தப் பைநாகப் பாயை சுருட்டி எடுத்துச் சென்றவர் அல்லவா நீங்கள் எங்கு செல்கிறீர்களோ நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத்தான் நான் செய்வேன் .நாரதர் மாதிரி நான் ஓடவில்லை.

அடடா.என் நெஞ்சம் உருகிவிட்டது..சரிசரி..சக்கரத்தாழ்வாரே.  இந்த கறிகாய் எல்லாம் மடமடவென்று நறுக்குங்கள்..

சக்கரத்தாழ்வார் மனதிற்குள் முணுமுணுப்பது கேட்கிறது. எத்தனையோ அசுரர்கள் தலையை வெட்டிய நாம் இப்போது கறிகாய் வெட்ட வந்தாச்சு எல்லாம் கலிகாலம்.

அங்க என்ன முணுமுணுப்பு?

ஒன்றுமில்லை பத்மநாபனே.

சரிசரி.. ஆதிசேடனே தினமும் நம் வைகுண்டத்தில் சாப்பிடுபவர் எத்தனை பேர்? அதற்கு ஏத்தமாதிரி சமைக்கணும் ?

அது இருக்கும் பல நூறு பேர் அதுவும் நீங்கள் சமைக்கிறது  தெரிந்தால் வைகுண்டம் என்ன கைலாச பிரம்ம லோகத்திலிருந்து கூட ஆட்கள் வந்து விடுவார்கள்

எத்தனை பேர் வந்தாலும் நான் படி அளக்கும் பெருமாளாக்கும்...
அரிசி 100 பேருக்கு எத்தனை படி போட வேண்டும்?

எனக்கு மண்டகப்படி தான் தெரியும் அரிசி எவ்வளவு படி என்பதெல்லாம் தெரியாது..ஹிஹி

சரி அதை விடு ஒரு குத்துமதிப்பாக  போடுவோம். ஒரு படி அரிசிக்கு எவ்வளவு ஜலம் விடணும்?

இப்படி நீங்க ஒவ்வொன்றுக்கும்  கணக்கு கேட்டால் எனக்கு தெரியாது  நான் வேண்டுமானால் காமதேனுவை வர சொல்லவா?

அதெல்லாம் வேண்டாம். சக்கரத்தாழ்வாரே! காய் வெட்டி ஆச்சா
முதலில் அடுப்பை பற்ற வைக்கணும்.அக்னியை வரச்சொல்  அவர்தான் நெருப்பை கொடுக்க வேண்டும் .

வாசுதேவனே  அக்னி பகவான் இன்று வேறு ஏதோ பெரிய வேலையாக சென்று இருக்கிறாராம். அவருடைய தீ கொழுந்துகளை மட்டும் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

சரியா போச்சு இந்த சின்ன சின்ன அக்னி குஞ்சுகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது ?சரி வாருங்கள் அடுப்பை பற்ற வையுங்கள்.
ஜெய விஜயர்களே  அண்டா குண்டா எல்லாத்தையும் வெளிய எடுங்கள்.

பெருமாளே எங்கள் பாக்கியம்! இவ்வளவு நாள் வைகுண்டத்தில் இருந்தாலும் உங்களை உள்ளே வந்து தரிசனம் செய்ததே இல்லை. வெளியில் நின்று வருவோர் போவோர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு இன்று  அந்த பாக்கியம் கிடைத்தது.
இந்தாருங்கள் .எல்லா பாத்திரங்களையும் வெளியே எடுத்தாகி விட்டது. மாயையை அழைத்து சமையலை கண்கட்டுவித்தை போல் நிமிடத்தில் செய்து விட்டால் என்ன?

அதெல்லாம் வேண்டாம். இதோ சக்கரத்தாழ்வார் கறிகாயை நறுக்கி விட்டார் அப்படியே கொஞ்சம் தேங்காய்களையும் திருவி விடப்பா.
 
பெருமாளே இன்று ஏகாதசியாகவே இருந்திருக்கலாம். அன்று அம்பரீசனை  துர்வாச ரிஷி அவமதித்த  போது மூவுலகையும் சுற்றி வந்த அவரை ஓட ஓட விரட்டினவன் நான்.கஜேந்திர ஆழ்வான் முதலை   வாயில் அகப்பட்டு ஆதி மூலமே என உங்களை அழைத்த பொழுது அந்த முதலை வாயை கிழித்தவன் நான் அல்லவா ?ஆரோக்கியத்திற்கும் வீரத்திற்கும் என்னை வழிபடுபவர்கள் எத்தனை பேர் ! ஆனால் இன்று நான்  வைகுண்டத்தில் சமையலறையில் கேவலம் காய்கறிகளை நறுக்கி தேங்காய் துருவி பொழுதை ஓட்டும் அவலத்தை எங்கு போய் சொல்வேன்

நான் மட்டும் என்னவாம் பாஞ்சன்யம் என்று பெயரில் பெருமையுடன் பெருமானின் திருவாயினால் ஊதப்பட்ட நான். மகாபாரதப் போரில் போரை துவக்க சிங்க நாதம் புரிந்த நான். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று ஆண்டாள் எண்ணி எண்ணி என் மேல் பொறாமை கொண்ட காலமெல்லாம் போய் இப்பொழுது பால் பொங்க ஆரம்பித்தால் ஊது  பாஞ்சன்யமே நீ உன் சங்கை ஊது என்று சொல்லி அடுப்பங்கரையில் என்னை உட்கார வைத்து விட்டார் நம் பெருமான்.

அடடா அவரின் சார்ங்கம் எனும் வில்லும் கௌமோதகீ   என்ற கதையும் அதோ  ஒரு மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை பாருங்கள்.

தடதட என்று பாத்திரங்கள் உருளும் சத்தமும் பின்னாலேயே அரங்கனின் அதட்டலும் கேட்கிறது.

அடடா இந்த ஆதிசேஷன் தன் ஆயிரம் தலையை வைத்துக்கொண்டு சும்மாயிறாமல் ஏதோ அமர்க்களம் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். பாவம் அவரும் என்ன செய்வார்? சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம்  என்று விஷ்ணுவிற்கு சேவை செய்தவரை இன்று தேங்காய் சேவை செய்ய விட்டால் என்ன செய்வார்?

என்ன அங்கே பேச்சு பலமாக இருக்கிறது அநேகமாக சமையல் எல்லாம் முடிந்துவிட்டது சமையலறையை மட்டும் கொஞ்சம் ஒழுங்கு செய்து விட்டால் அனைவரையும் சாப்பிடச் சொல்லலாம். வருணனும் வாயபகவானும்  வந்து இதமாக வேலை செய்தால் போதும் அடுப்பங்கரை சுத்தம் ஆகிவிடும்

எம்பெருமானே சப்தரிஷிகளும்  சனத்குமாராதிகளும் சத்யலோக கைலாச வாசிகளும் வைகுண்ட நித்தியசூரிகளும் எல்லோரும் இங்கு உங்கள் திருக் கையால் செய்யப்பட்ட அமுது உண்ண ஆவலோடு காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாற்கடல் கடைந்த பொழுது நீங்கள் மோகினி அவதாரம் எடுத்து உங்கள் திருக்கரங்களால் அனைவருக்கும் அமிர்தம் அளித்ததை போன்று இப்பொழுதும் செய்வீர்கள் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் தேவர்கள்..

ஆஹா இது என்ன மோகினி அவதாரமேதானோ?
என்ன நடை என்ன ஒயில்.

மகாலட்சுமி இல்லாவிட்டாலும் உங்களுக்கும்  கைமணம் இருக்கிறது அதோ பாருங்கள் இந்திராதி தேவர்களும் ரிஷிகளும் திருக்கண்ணமுதை ருசித்து ரசித்து சாப்பிடுவதை..

திருவின் கண்ணான இவரால் சமைத்த பண்டம் அமுதேதானே..

ஆதிசேஷனே உன் கவி திறனை  மெச்சினோம். ..

ஆஹா தாயாரின் குரல் கேட்கிறதே இதோ  பூதேவியாரும் ஸ்ரீதேவி தாயாரும் கருட வாகனத்தில் இங்கு இறங்குவது ஆஹா எத்தனை கண் கொள்ளா காட்சி வாருங்கள் தேவியரே..

இது என்ன தேவலோகமே இங்கு கூடி தலைவாழை இலையில் அமுது உண்ணும் காட்சி! என்ன நடக்கிறது ஆதிசேஷனே?

அம்மையே நேற்று நீங்கள் இருவரும் பேசிக்கொண்ட போது வைகுண்டநாதன் ஏதோ  சொன்னதை  தப்பாக புரிந்து கொண்டு கோபித்துக் கொண்டு சமையல் செய்யாமல் கிளம்பி விட்டீர்கள். ஆனால் எம்பெருமான் அயரவில்லை. எங்கள் அனைவரின் உதவியுடன் அற்புதமான விருந்தே படைத்து விட்டார் இதோ பாருங்கள் .ஆனால் என்ன.. அவர் ஒரு பிடி அவல் கூட சாப்பிடவில்லை. ஒருவேளை குசேலரை எதிர்பார்த்து இருக்கிறாரோ என்னவோ. ஹாஹாஹா.

என்ன மகாலட்சுமி ஏன் இந்தக் கோபம் அம்மா என்னிடம் ? உனக்கு என்ன  குறை?

அடடா க்ருஷ்ண க்ருஷ்ணா...பெருமாளே  எனக்கு என்ன கோபம் உங்களுக்காக  முக்கியமான உங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன் கண்ணை மூடி திறங்கள்

ஆஹா யசோதையம்மாவா! என்ன ஆச்சரியம்!

நீங்கள் பாட்டுக்கு நேற்று என்னிடம் சொல்லி விட்டீர்கள் என்ன இருந்தாலும் என் அம்மாவின் கை மணம் உனக்கு கிடையாது என்று .எனக்கும் அது நியாயமாகத்தான் பட்டது அதற்காகத்தான் இன்று விடியற்காலையிலேயே கோகுலம் சென்று யசோதையை அழைத்துக் கொண்டு விரைந்து வந்துவிடலாம் என்று உங்களிடம் சொல்லாமல் கூட கிளம்பினோம்.ஆனால் இது என்ன நீங்களோ இங்கே விருந்தே படைத்து விட்டீர்களே!  என்ன இருந்தாலும் நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை என்று ஆதிசேஷன் சொன்னார்

ஆமாம் கண்ணே..நேற்று நான் சொன்னது உண்மைதான். எனக்கு கொஞ்ச நாளாகவே அம்மாவின் கையால் சாப்பிட வேண்டும் என்று ஆசை தான் .அது  நேற்று வார்த்தையாக வெளியே வந்து விட்டது.  என் மனதை புரிந்து கொண்டு நீங்கள் இருவரும் செய்ததுதான் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
வாருங்கள் அம்மா நீங்கள் முதலில் உங்கள் கையால்  உருட்டி ஒரு கை வெண்ணெய் கொடுங்கள்.பிறகு உங்கள் கைமணத்தோடு ஒரு வத்தக் குழம்பு செய்தால் கூட போதும்.

கண்ணே என் கண்மணியே  என்னவென்று சொல்வேன் உன் அன்பை!  கண்களில் வழியும் நீரால்  என்னால் உன்னை பார்க்கவும் முடியவில்லை மேலும் வயதாகி விட்டதல்லவா? இதோ இப்போதே உனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையும் நிமிடத்தில் செய்து பரிமாறுகிறேன் கண்மணி.

நாராயண நாராயணா! என்ன சண்டை முடிந்து சமாதானம் ஆகிவிட்டதா?

சண்டையும் இல்லை ஒன்றும் இல்லை  ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவதே உங்கள் வேலையாக போய்விட்டது. அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று நாங்கள் சென்றால் நீங்களும் ஆதிசேஷனும் சேர்ந்து  எங்கள் இடையே ஒரு கலகத்தையே உண்டாக்கி விட்டீர்கள்.

அதனால் என்ன? நாரதர் கலகம் நன்மையில் முடியும் அல்லவா?  இதோ இத்தனை தேவர்களும் ரிஷிகளும் அனைவருக்கும் அண்ணலின் கையால் அமுது கிடைத்தது இந்த கலகத்தினால் தானே!

அதானே.. எங்களுக்கும் ஒரு மாற்றமாக  சமையலறையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது

அது சரி.. சமையல் முடியும் வரை மூக்கால் அழுதுவிட்டு இப்பொழுது வாய்ப்பு அது இது என்று பெருமை பேசுவது..

பேசியதுபோதும்..எல்லோரும் யசோதை அன்னையின் கையால் அமுது உண்ண வாருங்கள்.

கோவிந்தாகோபாலா நந்தகுமாரா நவநீத சோரா  ஆஆஆஆ

வாழியவே பல்லாண்டு காலம் எங்கள் கதை கேட்ட அனைவரும் வாழியவே வாழிய வாழிய வாழியவே தத்தோம்தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்..

By Rajeswari Neelakantan
28/08/2022

2 comments:

Shrividya said...

Superb imagination

உஷா said...

அடடா... அற்புதமான விருந்து!