அடுத்தாத்து அம்புஜத்தின் வில்லத்தனம்
By Rajineel Neelakant
என்ன அநியாயமாஇருக்கு பாருங்கோ..
நேத்திக்கி இந்த சுமித்ரா மாமி வந்த போது தெரியாத்தனமா நம்மாத்து காரைப் பத்தி பொலம்பினேன்..
ஏண்டி அவ கிட்ட எல்லாம் என்னப் பத்தி சொல்லிண்டு!
அடராமா! உங்களப்பத்தி அவகிட்ட சொல்லி என்ன புண்ணியம். அவ திரும்ப அவ கதையச் சொல்லி அழுவா.
நான் நம்ப கார் வாங்கி பத்து வருஷம் ஆச்சு .ஏதோ ஐ20 ங்கறதால ஓடிண்டு இருக்கு. வேற மாத்தணும்னா அப்பாவும் புள்ளையும் ஓலால போ ஊபர்ல போங்கரான்னு சொன்னேன்.
அதுக்கு அவ இப்போ லேடஸ்ட்டா வந்த ஹோண்டா,மாருதி, ஹுண்டே ,ஃபோர்டுன்னு ரகம் வாரியா அடுக்கிண்டே போனா. கார் வாங்கறதெல்லாம் என்கையில இல்லன்னு சொல்லி அனுப்பி வச்சேன்.
இன்னிக்கு காலைல பார்த்தா என் இ மெயில் ஐடிக்கு வகைக்கு நூறு கார் வாங்க மெயிலா குவிஞ்சிருக்கு. என் மெயில் ஐடிய குடுக்க இவ யாரு?
அன்னிக்கு அப்பிடித்தான். புது வாஷிங் மிஷின் வாங்கியிருக்கேன்னு பீத்திக்க வந்தா. சரின்னு சும்மா ஒரு பேச்சுக்கு என்ன ப்ராண்டு? என்ன மாடல்னு கேட்டதுக்கு, எனக்கு இதேமாதிரி வாஷிங் மெஷின் வாங்க ஆஃபர்ன்னு விவேக்கும் வசந்தும் போட்டி போட்டு மெயில் அனுப்பறா.
நான் நம்மாத்து துணிய கைல தோய்க்கறேன். கால்ல தோய்க்கறேன். இல்ல, இதோஇந்த உளுத்துப் போன மிஷின்ல தோய்க்கறேன் அதுபத்தி இவளுக்கென்ன?
இது கூட பரவால்ல. போனவாரம் நம்ப பேத்திய நல்ல ஸ்கூல்ல சேக்கணும்னு எதிர்த்தாத்து டீச்சர் மாலதிகிட்ட சொன்னதும் இவ என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரிபடபடன்னு பத்து ஸ்கூல் பேரை அடுக்கினா.
மாலதிய ஒரு வார்த்தை பேசவிடல. அடுத்தநாள் ஃபேஸ்புக்குல இவ சொன்ன ஏதோ இன்டர்நேஷனல் ஸ்கூல் பத்தி ஸஜெஷன் வரது. இது அவ வேலைதான்னு்புரியாம போக நான் என்ன மரமண்டையா?
ஒரு ஊசி வாங்கணும்னு சொன்னா கூட கார்த்தால மொத வேலையா ஃபேஸ்புக்குல ஸஜஷன் வரது.
இன்னிக்குபோய் அவகிட்ட இனி உன் சங்காத்தமே வேண்டாம்னு சொல்லிட்டு வரேன்.
இருடி. மாதவன் வரட்டும். இப்பிடி எடுத்தேன் கவிழ்த்தேன்னு எல்லாம் ப்ரெண்ட்ஷிப்பை முறிக்காத.
அப்பா அப்பா ..! அம்மா எங்க விறுவிறுன்னு போறா?
டேய் மாதவா. ”......” இதாண்டா்விஷயம்.
அம்மா அம்மா. நில்லு நில்லு. ஒரு நிமிஷம் உள்ள வா. நீ சொல்றதையெல்லாம் ஒட்டுக் கேட்டு மெயில் அனுப்பற மாமிகளை உன் வீட்டிலேயே வச்சுண்டு பக்கத்தாத்து மாமிய சண்டைக்கிழுக்காத.
என்னடா சொல்றே? நம்மாத்துல யாருடா ஒட்டுக் கேக்கற மாமி?
ம்.... எல்லாம் இந்த கூகிள் மாமியும் அலெக்ஸா மாமியும்தான்.
ஒண்ணுந்தெரியாத பூனை மாதிரி இருந்துண்டு நீயாரோட எது பேசினாலும் அதுலேர்ந்து க்ளூ வார்த்தைய எடுத்துண்டு அதுக்கேத்த விளம்பரத்தை உன் மெயிலுக்கோ ஃபேஸ்புக்குக்கோ ஓசப்படாம அனுப்பிடுவா இந்த ரெண்டு மாமியும்.
என்ன அநியாமாடா இருக்கு? அப்போ ஆத்துக்குள்ள என்னதான் பேசறது? வெளியில தெருவில போயா பேசமுடியும்?
அம்மா அது கூட ரிஸ்க்குதான். உன் ஸ்மார்ட் ஃபோனே ஒரு ஒட்டுக் கேக்கற மாமிதான். அத பக்கத்துல வச்சுண்டு அப்பாகிட்ட ரகசியமா உன் மாட்டுப் பொண்ணபத்தி ஏதாவது பேசினியோ , அது எனக்கு போட்டுக் கொடுத்துடும் ஞாபகம் வச்சுக்கோ.
டேய் டேய் நம்மாத்துல அது நடக்காதுடா. ஏன் தெரியுமா ?அப்பாகிட்ட சொல்றதும் இதோ இந்த சொவத்துக்கிட்ட சொல்றதும் ஒண்ணுதான். அப்பிடியே ஏதாவது சொல்லணும்னா இனிமே நான் பாத்ரூமுக்குள்ள ஃபோன் கூட எடுத்துக்காம போய் அப்பறம்தான் தனியா பொலம்புவேன் தெரிஞ்சுக்கோ....
என்னா ஒரு வில்லத்தனம் இந்த கூகுளுக்கு? ஹூம்.
By Rajeswari Neelakantan
No comments:
Post a Comment