Pages

Search This Blog

Friday, December 14, 2018

Bhagavat Gita Stories

கீதைக் கதைகள் 2


 சாயங்கால நேரம் பஸ் ஸ்டான்டில் ஒரு பெண் பாவம் தனியாக நின்று கொண்டிருந்தது. இருட்ட ஆரம்பித்தாயிற்று. கடிகாரத்தைப்பார்ப்பதும் வழியைப் பார்ப்பதுமாக நின்ற பெண்ணிடம் தனசேகரன் வேண்டுமென்றே கிட்ட நெருங்கி ஏதோ சில்மிஷம் செய்தான்

சாரதி மெல்ல அதட்டியும் கெஞ்சியும் பார்த்தும் கேட்கவில்லை

தனா! வேணான்டா. அதுவே பயந்து கெடக்குதுநீ விளயாட்டா நினைக்கறது வினையாகும்டா... சொன்னாக்கேளு. “


ஏய் விஜய் .. ! என்னா ஹீரோன்னு நெனப்பா. நைஸா அந்தப் பொண்ணுக்கு ரூட் உடுரியா?

பேசாமப் போவியா.. “


பயத்துடன் அந்தப் பெண் திரும்பிப் பார்த்ததும்,


பாத்தியா அதுவே நம்பள லுக்கு உடுது. நீ என்னா நடுவுல


விஜய் தனா கையப் பிடித்து இழுத்து ஒரு முறை முறைத்தான்

இதோ பார் தனா ..ப்ரெண்டுன்னு பாக்கறேன். பேசாம வா. இல்லன்னா..”


இல்லன்னா.. என்ன பண்ணுவே? போலீஸ கூப்பிடுவியா? செய்யி பாப்போம்

ஏய் பொண்ணு உன்ன கூப்பிட்டா வருவேதானே? “


தனா எகத்தாளமாகக் கேட்டதும் அந்தப் பெண் அழ ஆரம்பித்தது


எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தனா மேலே மேலே அந்தப் பெண்ணைச் சீண்டவும் பொறுக்காமல் தனாவை பளாரென்று அறைந்து விட்டான் விஜய்


அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெண்ணை ஏற்றி விட்டு காசையும் கொடுத்து அனுப்பிவிட்டான் 

 

தனா,” டேய் என்னைய அவமானப்படுத்திட்ட இல்ல உன்ன விடமாட்டண்டாஎன்றபடியே 

கோபித்துக்கொண்டு விறுவிறுவென்று போயே விட்டான்

விஷயம் அதோடு முடிந்தது என்று நினைத்தது தவறு என்பது இன்று விடிகாலையில் தனா கையில் அறிவாளுடன் வாசலில் நின்றதும்  புரிந்தது விஜயனுக்கு

டேய் என்னாடா பாக்கற?

உன்ன இன்னிக்கி பொலி போடாத போகமாட்டேன்தனா ஆவேசமாகக் கத்திக் கொண்டே வெட்ட வந்து ஆர்பாட்டம் பண்ணியதும் போலீஸ் கூப்பிடாமலேயே ஆஜர் ஆனதும் தனாவை உள்ளே தள்ளியதும் மடமடவென நடந்தது. எல்லாம் கனவு போல இருந்தது விஜய்க்கு

சோகமாக உட்கார்ந்திருந்த விஜயின் அருகில் சாரதி வந்தான்

என்ன விஜய்? ஏன் சோகப் படறே? இங்க பாரு நீயா வம்புக்கு போகலை. தனா தப்பு பண்ணதுக்கு தண்டனை அனுபவிக்கறான். ப்ரெண்ட்தானேன்னு வேடிக்கை பார்க்காம அவனுக்கு புத்தி சொல்லித் திருத்த பார்த்தும் அவன் உன்னையே வெட்ட வந்தா அவனுக்காக வருத்தப் படறது தேவையே இல்லை

போய் போலீஸ் கிட்ட நடந்ததைச் சொல்லிட்டு வா. அவன் திருந்தி வந்தா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நல்லது. இல்லைன்னா அழிவு அவனுக்குதான். என்ன புரிஞ்சுதா?” 

என்று சாரதி சொன்னபோது ஏதோ புரிந்த மாதிரிதான் இருந்தது விஜய்க்கு


மெல்ல போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் 


No comments: