Pages

Search This Blog

Wednesday, December 19, 2018

#cooking

#மாலைடிபன்

ஒருநாள் கடைக்குப் போனேனா.. ஆர்வக்கோளாறுல பதஞ்சலி மல்டி க்ரெயின் தாலியான்னு எதையோ பாத்து ஹை நல்ல சத்தான ஏதாவது சாப்பிடுவோம்னு வாங்கிப் பையில போட்டு வீட்டுக்கு வந்தது, அழையா விருந்தாளி போல ஒரு ஓரமா பத்து பதினைஞ்சு நாளா சமையலறைல உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. 

என்னைக் கேட்காம கடையில இருந்த நண்பர்கள் கிட்டேர்ந்து பிரிச்சுப்புட்டு இப்போ குறுக்க நெடுக்க போற ..வர்ற... என்னதான் என்னப் பண்ணப்போற? என்று கடும் கோபத்தோட பாத்தாமாதிரி இருந்தது. 

இதோபாரும்மா இந்தபாக்கட்ல சொல்லியிருக்காமாதிரி உப்புமா கிப்புமா எல்லாம் என்னால பண்ணமுடியாது.வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன்னு டீல் பேசிவிட்டு
அப்போதான் தோசைக்கு அரிசிய ஊறப்போட்டுட்டு உட்கார்ந்தேன்.  

திடீர்னு ஹை இது நல்ல ஐடியாவா இருக்கேன்னு 
சரிம்மா உன்னையும் ஊறப்போடறேன் ‘நல்லா வந்தா பேர் எனக்கு வர்லன்னா இழுக்கு உனக்கு’ என்று டீல் பேசி 3 மணி நேரம் ஊற வைத்து அடைக்கு அரைப்தைப்போல கொஞ்சம் நற நற என்று அரைத்து உப்புப் போட்டு வெங்காயம் ,பச்சை மிளகாய்,கறுவேப்பிலை ,கொத்தமல்லி ,இஞ்சி எல்லம் பொடியாக நறுக்கிப் போட்டு அடைக்கல்லில் கொஞ்சம் தடியாக ஆனால் நன்றாக மொறு மொறுவென வரும்படி வார்த்து ( கொஞ்சம் தாரளமா நல்லெண்ணெய் விட்டு) போட்டதும், 
என் மாட்டுப் பெண் A+ மார்க் கொடுத்ததுமில்லாமல்,
 எங்கள் வீட்டு வசிஷ்டர் வாயாலேயே ப்ரம்ம ரிஷி பட்டம் வாங்கினா எனக்கு மயக்கம் வராம என்ன செய்யும்?

கொசுறாக என் இரண்டு வயது பேத்தியும் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டதும் 
“பதஞ்சலி தாலியா உனக்கு இருப்பேன் நான் வேலியா.. இனி உன் பாக்கெட் ஆகும் காலியா “
என்று டி ராஜேந்தர் போல கோஷமிட்டு இன்றே வாங்கினேன் இன்னொரு பாக்கெட் ஜாலியா.

No comments: